இனி வியட்நாமுக்கு நேரடி பயணம்!
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான நேரடி விமான சேவை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
✈️ வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் VN-671 என்ற முதல் விமானம், ஹோ சி மின் நகரிலிருந்து புறப்பட்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
💦 விமானத்திற்கு பாரம்பரிய நீர் தாரை மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
👥 முதல் விமானத்தில் 164 பயணிகள் இலங்கையை வந்தடைந்ததுடன், 172 பயணிகள் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.
📅 வாரத்திற்கு 3 நாட்கள்
➡️ ஞாயிறு
➡️ புதன்
➡️ வெள்ளி
⏱️ இலங்கை–வியட்நாம் நேரடி விமானப் பயணத்திற்கு சுமார் 4 மணி 30 நிமிடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌏 இந்த புதிய இணைப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இலங்கையிலிருந்து வியட்நாமுக்கு இனி நேரடி வான்வழிப் பயணம் — புதிய பயண வாய்ப்புகளுக்கு கதவு திறந்தது!

