அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சவால்.

ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, அமெரிக்கா தனது MQ-9 Reaper ஆளில்லா விமானத்தின் 25 வீதத்தை இழந்துள்ளதாக சுயாதீன செய்திகள் கூறுகின்றன.

இது அமெரிக்காவின் பலயீனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட அலகுகளின் விலை 30 மில்லியன் டாலர் முதல் 50 மில்லியன் டாலர் வரை இருக்கும் நிலையில், 45 க்கும் மேற்பட்ட MQ-9 Reaper ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதால், 1.3 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் ஹோமொஸ் நீர்ப் பரப்பு மட்டுமல்லாது, யேமனின் வான்பரப்பு வரையிலான பகுதிகளில் MQ-9 Reaper ஆளில்லா விமானங்கள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகின்றதானது, அப்பகுதிகளில் உள்ள அமெரிக்க இராணுவத்துக்கு பாரிய சவாலாக உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

MQ-9 Reaper என்பது அமெரிக்காவின் General Atomics நிறுவனம் உருவாக்கிய ஒரு ஆளில்லா விமானம். இது முழுமையாக இராணுவ நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் தயாரிப்பு 1990 இல் ஆரம்பித்து, 2000 ஆண்டுகளில் பாவனைக்கு வந்தது.

உளவுத் தகவல்களை திரட்டுதல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் பல நாடுகளும் இதைப் பயன்படுத்துகின்றன. இது நீண்ட தூரம் பறக்கும் ஆற்றல் உள்ளது.

Recommended For You

About the Author: admin