தலைமன்னார் பாதையின் செயலிழந்த ரயில் சமிக்ஞை அமைப்பைச் சீரமைக்காமல், பாதுகாப்பற்ற முறையில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாகவே அவசர அவசரமாக இச்சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த இப்பாதையில் முறையான பயணிகள் வசதிகளோ அல்லது சமிக்ஞை சீரமைப்போ இன்றி ரயில்களை இயக்குவது விபத்துகளுக்கே வழிவகுக்கும் எனக் எச்சரித்துள்ளார்.
தொழிற்சங்கங்களின் நல்லாலோசனைகளைப் புறந்தள்ளி, பாதுகாப்பற்ற முறையில் சேவையைத் தொடங்கியுள்ளமைக்குத் தமது பலத்த எதிர்ப்பைப் பதிவுசெய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

