அலையில் சிக்கிய சிறுவன். உயிரை பணயம் வைத்த 16 வயது வீரன்: வெள்ளை மாளிகையில் கௌரவம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவன் நாதனியல் ராய், 16 வயதான இளைஞரும் உயிர்காப்பாளருமான ரைடர் வில்லியம்ஸால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த துணிச்சலான மீட்பு சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கவனத்திற்கும் சென்றுள்ளது.

இதையடுத்து, நேற்று (17) சிறுவன் நாதனியல் ராய் மற்றும் அவரைக் காப்பாற்றிய ரைடர் வில்லியம்ஸ் ஆகிய இருவரையும் வெள்ளை மாளிகைக்கு சந்திப்புக்காக ஜனாதிபதி ட்ரம்ப் அழைத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin