ஐரோப்பாவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை!
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் வகையில்,
ஐரோப்பிய நாடுகளில் செயல்படும் ஆயுதத் தொழிற்சாலைகள் ரஷ்யாவின் சாத்தியமான ராணுவ இலக்குகளாக கருதப்படும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவதன் மூலம் ஐரோப்பிய நாடுகள் இந்தப் போரில் நேரடியாக ஈடுபட்டு வருவதாகவும்,
ஐரோப்பாவில் ஆயுத உற்பத்தி ஆலைகள் மற்றும் கூட்டு நிறுவனங்கள் அமைப்பது போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக மேலும் நீடிக்கச் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, உக்ரைனுக்காக Patriot ஏவுகணை இடைமறிப்பு ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை போலந்தில்
அமைக்கும் திட்டம் தொடர்பான கேள்விக்கு அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

