ஆடி அமாவாசையை முன்னிட்டு கீரிமலை வீதி துப்புரவு

ஆடி அமாவாசை மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு, மாவிட்டபுரம்–கீரிமலை வீதியின் இருமருங்கிலும் இன்று  துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளரின் நேரடி கண்காணிப்பில், பிரதேச சபை ஊழியர்களால் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைவுகூர்ந்து தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்வதற்காக கீரிமலை புனித நீரூற்றுக்கு பெருமளவான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

அதேவேளை, மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் வருடாந்திர திருவிழாவின் நிறைவு நிகழ்வான தீர்த்த உற்சவமும் இந்நாளில் இடம்பெறுவதால், மாவிட்டபுரம்–கீரிமலை பகுதி பக்தர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் பகுதியாக உள்ளது

Recommended For You

About the Author: admin