வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்று (08) ஆலய சந்நிதியில் 1,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து வழங்கிய இந்த நடன ஆற்றுகை, ஆலயத் திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக அமைந்ததுடன், அதனை நேரில் கண்ட பக்தர்களையும் பொதுமக்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

