Smartphones பயன்படுத்துவோர் மத்தியில் தற்காலத்தில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள ஒரு விடயம் தான், WhatsApp

Smartphones பயன்படுத்துவோர் மத்தியில் தற்காலத்தில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள ஒரு விடயம் தான், WhatsApp செயலியில் தேவையற்ற Chats, Photos மற்றும் Videosகளை அழித்த பின்னரும் கூட, Phoneன் Storage குறையாமல் Fullஆகவே காண்பிக்கப்படுவது ஆகும் இந்த சிக்கலுக்கான காரணங்கள் மற்றும் அதனை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கான இலகுவான வழிமுறைகள் இவைதான்.

​முதலாவதாக, WhatsApp செயலியினூடாகத் தானாகவே சேமிக்கப்படும் Backup Filesகளே இதற்கான பிரதான காரணியாக அமைகின்றன.

Android Phones பயன்படுத்துவோர், தமது File Manager செயலிக்குச் சென்று Internal Storage > Android > media > com.whatsapp > WhatsApp > Databases எனும் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு பல GB அளவில் தேங்கிக்கிடக்கும் பழைய msgstore Filesகளில், மிகவும் அண்மைய Fileஐ மாத்திரம் வைத்துக்கொண்டு, ஏனைய பழைய Filesகளை Delete செய்வதன் மூலம் அதிகளவிலான Storageஐ உடனடியாக மீட்டெடுக்க முடியும்.

அடுத்ததாக, WhatsApp செயலியினுள்ளேயே சென்று Settings > Storage and Data > Manage Storage பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு 5 MB-க்கும் (Larger than 5 MB) அதிகமான அளவுள்ள பெரிய Videos மற்றும் Files தனியாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.

அவற்றை நேரடியாக Select செய்து Delete செய்யும் போதே Phone Storage உண்மையாகவே விடுவிக்கப்படும்.

மேலதிகமாக, Phone Settingsல் உள்ள Apps பகுதிக்குச் சென்று WhatsAppன் Clear Cache வசதியைப் பயன்படுத்துவதும், Galleryல் உள்ள Recently Deleted பகுதியில் உள்ள Filesகளை முற்றாக Delete செய்வதும் சிறந்த பலனைத் தரும்.

எதிர்காலத்தில் இவ்வாறான Storage நிரம்பும் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, WhatsApp Settingsஇல் உள்ள Storage and Data பகுதிக்குச் சென்று Media Auto Download வசதியில் உள்ள அனைத்து Ticks-களையும் அகற்றி ‘No media’ என மாற்றி அமைப்பது அவசியமாகும்.

இதன் மூலம் தேவையற்ற Photos மற்றும் Videos தானாகவே Download செய்யப்படுவது தடுக்கப்பட்டு, Phone Storage எப்போதும் சீராகப் பேணப்படும்

Recommended For You

About the Author: admin