ChatGPT சேவையில் உலகளாவிய ரீதியில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை OpenAI நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்கள் சேவையைப் பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பயனர்கள் கணக்கில் உள்நுழைய முடியாமை, புதிய கேள்விகளைக் கேட்க முடியாமை மற்றும் உரையாடல் வரலாறுகளைப் பார்க்க முடியாமை போன்ற சிக்கல்கள் இதில் அடங்கும். இலவசப் பயனர்கள் மற்றும் கட்டணச் சந்தாதாரர்கள் என இரு தரப்பினரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்கோளாறு குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள OpenAI நிறுவனம், சேவை எப்போது சீராகும் என்ற தகவலை இதுவரை அறிவிக்கவில்லை

