மிருகக்காட்சிசாலை ஊழியராக இருந்து போதைப்பொருள் கடத்தியவருக்கு ஆயுள் தண்டனை

துபாயில் தலைமறைவாக உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ‘சுவா சமந்தா’வின் பிரதான உதவியாளரான நாளக்க புஷ்பகுமார என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பணியாற்றி வந்த சந்தேகநபர், அவ்வேலையின் போர்வையிலேயே போதைப்பொருள் கடத்தலை முன்னெடுத்து வந்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக ஒரே வழக்கில் நிரூபிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin