பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கட்டுப்பாடில்லாமல் பரவி வரும் சக்திவாய்ந்த காட்டுத்தீ காரணமாக, சுமார் 200,000 (2 லட்சம்) பேர் தமது வீடுகள் மற்றும் சுற்றுலா விடுதிகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினின் தலை நகர் மாட்ரிட்டிற்கு (Madrid) அருகில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக மாட்ரிட் நகரின் மேற்குப் பகுதி ஆகாயம் அடர்ந்த சாம்பல் நிற புகையால் சூழப்பட்டுள்ளதுடன், பலத்த காற்று காரணமாக தீ மேலும் வேகமாகப் பரவக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வீரர்கள், சிறப்பு விமானங்கள் மற்றும் அவசர பேரிடர் மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மீட்பு மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

