AI மூலம் உருவாக்கப்பட்ட போலி பொலிஸ் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை…
இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் உத்தியோகபூர்வமானவை அல்ல எனத் தெரிவித்துள்ள பொலிஸார், பொதுமக்கள் அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கை பொலிஸின் பெயர், இலச்சினை மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் விளம்பரங்கள் அல்லது அறிவித்தல்கள் உண்மையானவை அல்ல எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் அறிவித்தல்களை மட்டுமே பொதுமக்கள் நம்புமாறு பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

