கொழும்பில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்: நெருக்கடி வேளையில் இலங்கைக்கு தோள் கொடுக்கும் இந்தியா!
இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு நெருக்கடியிலும் இந்தியா எப்போதும் உறுதியாகத் துணைநிற்கும் என இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கொழும்பில் தெரிவித்தார்.
இந்திய வம்சாவளி மக்களுடனான சந்திப்பில் உரையாற்றிய அவர், இரு நாடுகளுக்கிடையிலான கலாசாரத் தொடர்புகளே இந்த வலுவான உறவுக்கு அடித்தளம் என்றார்.
இந்தியாவின் பொருளாதாரம் கடந்த பத்தாண்டுகளில் 2 ட்ரில்லியன் டொலரிலிருந்து 4 ட்ரில்லியன் டொலராக உயர்ந்துள்ளதுடன், 2026-2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மேலும், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ. 39,000 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

