இன்று யாழ்ப்பாணம் செல்லும் பிரதமர்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (22) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது பல்கலைக்கழகத்தின் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
மேலும், யாழ்ப்பாணம் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

