உலகின் முதலாவது ‘ஹைப்ரிட்-மின்சார’ விமானப் பயணம் வெற்றி!

உலகின் முன்னணி எஞ்சின் தயாரிப்பு நிறுவனமான GE ஏரோஸ்பேஸ், ஹைப்ரிட்-மின்சார (Hybrid-Electric) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 30,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் விமானத்தை வெற்றிகரமாகப் பறக்கவிட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ‘சாப் 340’ ரக விமானம் மூலம் இச்சோதனை முன்னெடுக்கப்பட்டது.

பாரம்பரிய ஜெட் எஞ்சின்களுடன் மின்சார அமைப்பை ஒருங்கிணைக்கும் இத்தொழில்நுட்பம், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து பசுமைக்குடில் வாயு உமிழ்வைக் கணிசமாகக் கட்டுப்படுத்த உதவுகிறது.

குறைந்த கார்பன் உமிழ்வைக் கொண்ட வர்த்தக விமானங்களின் உற்பத்தியை விரைவுபடுத்தவும், சுற்றுச்சூழல் நட்பு விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும் இச்சாதனை பெரும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Recommended For You

About the Author: admin