திடீர் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பான பொலிஸ் அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்

திடீரென அதிக சொத்து சேர்த்தவர்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் குறித்துத் தகவல் அளிக்குமாறு ஜூலை 9 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையைத் திரும்பப் பெறுமாறு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இலங்கை பொலிஸாரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் சொத்து வரி இல்லாத நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற சட்டப்பூர்வ வழிகள் மூலமும் பலர் சொத்துக்களை ஈட்டியிருக்கலாம் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாத இத்தகைய உத்தரவுகள், சாதாரண மற்றும் கிராமப்புற மக்களைத் துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் வழிவகுக்கும் என்றும் ஐ.தே.க எச்சரித்துள்ளது.

எனவே, வருமான வரித் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் ஆலோசித்து, இந்த அறிவிப்பை வாபஸ் பெற்று புதிய தெளிவான வழிகாட்டலை வெளியிடுமாறு பொலிஸாரை வலியுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin