2026 உலகக் கோப்பை மெஸ்ஸியை முந்தி வரலாற்றுச் சாதனை படைத்த எம்பாப்பே

2026 உலகக் கோப்பை மெஸ்ஸியை (Lionel Messi) முந்தி வரலாற்றுச் சாதனை படைத்த எம்பாப்பே (Kylian Mbappé)… தொடர்ச்சியாக 2-ஆவது முறையாக ‘தங்கக் காலணி’ (Soulier d’or) விருது!

 

பாரிஸ் 20.07.2026 Ⓒ sci

ஸ்பெயின் (Espagne) மற்றும் அர்ஜென்டினா (Argentine) இடையேயான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மகுடம் சூடிய நிலையில், பிரான்ஸ் அணியின் நாயகன் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappé) 2026 உலகக் கோப்பையின் அதிக இலக்குகள் (Buts) அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிக இலக்குகள் அடித்த வீரர் என்ற மாபெரும் உலகச் சாதனையையும் அவர் தனி ஒருவனாகத் தன்வசப்படுத்தியுள்ளார்.

 

நேற்று ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் அருகே நடைபெற்ற இறுதிப்போட்டியில், அர்ஜென்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸியால் இலக்குகள் எதுவும் அடிக்க முடியாததால், அவரது மொத்த உலகக் கோப்பை இலக்குகளின் எண்ணிக்கை 21 ஆக முடங்கியது. அதேவேளையில், பிரான்ஸ் அணியின் முன்கள வீரரான எம்பாப்பே இந்தத் தொடரில் 10 இலக்குகளைக் குவித்து, மொத்தம் 22 இலக்குகளுடன் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக இலக்குகள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

 

இதன் மூலம், பாரிஸ் சென் -ஜெர்மைன் (Paris Saint-Germain) அணியில் தன்னுடன் இணைந்து விளையாடிய முன்னாள் சக வீரரான மெஸ்ஸியை அவர் முந்தியுள்ளார். மேலும், உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது முறையாக (2022 மற்றும் 2026) ‘தங்கக் காலணி’ (Soulier d’or) விருதை வென்ற முதல் வீரர் என்ற இமாலயச் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

 

எம்பாப்பேயின் இமாலய இலக்குப் பயணம் (Parcours des buts)

தற்போது 27 வயதாகும் எம்பாப்பே, உலகக் கோப்பைகளில் கடந்து வந்த பாதை:

 

2018 உலகக் கோப்பை: 4 இலக்குகள்

 

2022 உலகக் கோப்பை: 8 இலக்குகள்

 

2026 உலகக் கோப்பை: 10 இலக்குகள்

 

மொத்தமாக 22 இலக்குகளைக் குவித்துள்ள எம்பாப்பே, ஜெர்மனியின் (Allemagne) மிரோஸ்லாவ் குளோசாவின் (Miroslav Klose – 16 இலக்குகள்) மாபெரும் சாதனையைக் கடந்ததோடு மட்டுமின்றி, மெஸ்ஸியையும் பின்னுக்குத் தள்ளி உச்சம் தொட்டுள்ளார்.

 

வெற்றியிலும் ஒரு சோகம்: எம்பாப்பேயின் நெகிழ்ச்சி (Un succès amer)

சனிக்கிழமை இங்கிலாந்து (Angleterre) அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் (Petite finale) பிரான்ஸ் அணி 4-6 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டத்தில் எம்பாப்பே இரண்டு இலக்குகளை (Doublé) அடித்ததன் மூலமே அவர் முதலிடத்திற்கு முன்னேறினார். பிரான்ஸ் அணிக்காக அவர் இதுவரை 107 ஆட்டங்களில் விளையாடி 66 இலக்குகளைப் பதிவு செய்துள்ளார்.

 

ஆயினும், இந்தச் சாதனை குறித்துக் கனத்த இதயத்துடன் பேசிய எம்பாப்பே, “உலகக் கோப்பையில் அதிக இலக்குகளை அடிப்பது ஒரு வீரனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். அது வரலாற்றுக்கான ஒரு நல்ல பதிவுதான். ஆனால், இன்று என் மனதில் ஓடுவது அதுவல்ல. நான் வரலாற்றில் அதிக இலக்கு அடித்த வீரராக இல்லாமல் இருந்திருந்தாலும் பரவாயில்லை, நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் (Finale) என் அணி விளையாடியிருக்க வேண்டும் என்பதையே நான் அதிகம் விரும்பினேன்,” என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

 

ஒரே உலகக் கோப்பைத் தொடரில் 10 இலக்குகள் அடித்ததன் மூலம், 1970-ஆம் ஆண்டில் ஜெர்மனியின் கெர்ட் முல்லர் (Gerd Müller) படைத்த சாதனையை எம்பாப்பே சமன் செய்துள்ளார். பன்னாட்டுக் கால்பந்துச் சம்மேளனம் (Fédération internationale) 2030 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 64 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ள நிலையில், 1958-ஆம் ஆண்டு ஒரே தொடரில் 13 இலக்குகள் அடித்துத் தனது சக நாட்டு வீரரான ஜஸ்ட் ஃபொந்தன் ன் வைத்துள்ள முறியடிக்கப்படாத மாபெரும் சாதனையை, அடுத்து வரும் உலகக் கோப்பையில் எம்பாப்பே தகர்ப்பார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin