மத்திய கிழக்குப் போர் ஈரானின் ஏவுகணைகளுக்கு முக்கிய இலக்காக ஜோர்டான் மாறியது ஏன்?

மத்திய கிழக்குப் போர் (Guerre au Moyen-Orient): ஈரானின் (Iran) ஏவுகணைகளுக்கு முக்கிய இலக்காக ஜோர்டான் (Jordanie) மாறியது ஏன்?

கடந்த ஜூ லை 7-ஆம் திகதி மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூண்டுள்ள நிலையில்,

அமெரிக்காவின் முக்கியக் கூட்டாளியான ஜோர்டான் மீது ஈரான் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

 

அமெரிக்கப் படைகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள ஜோர்டான், தற்போது ஈரானின் பிரதான இலக்குகளில் ஒன்றாக (Cible privilégiée) மாறியுள்ளதன் பின்னணி என்ன?

 

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூ லை 17) ஜோர்டானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய கோரத் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்;

 

4 பேர் படுகாயமடைந்தனர். கடந்த ஐந்து நாட்களில் மட்டும் இது 4-ஆவது தாக்குதலாகும்.

 

குறிப்பாக, ஜோர்டானில் உள்ள மிகப்பெரிய அமெரிக்கப் படைத்தளமான அஸ்ராக் (Base aérienne d’Azraq) விமானப்படைத் தளம் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

 

இதில் அமெரிக்க வான்படையின் (US Air Force) பல பிளாக்ஹாக் (Blackhawk) உலங்குவானூர்திகள் (Hélicoptères) பெருத்த சேதமடைந்துள்ளன.

 

ஈரானிடம் இன்னும் ஏவுகணைகளின் (Missiles) மாபெரும் இருப்பு உள்ளதையும், அமெரிக்காவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை (Systèmes de défense aérienne) எளிதாக

 

ஏமாற்றி ஊடுருவும் திறனை அவர்கள் பெற்றுள்ளதையும் இந்தத் தாக்குதல்கள் அப்பட்டமாகக் காட்டுகின்றன.

 

போர் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே, சவூதி அரேபியா (Arabie saoudite) போன்ற நாடுகள் தங்கள் வான்வெளியையும் நிலப்பரப்பையும் பயன்படுத்த அமெரிக்காவிற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. இதனால்,

 

பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் இருந்த தனது படைகளை, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை (Département américain de la Défense) பாதுகாப்பான இடமாகக் கருதி ஜோர்டானுக்கும் இஸ்ரேலுக்கும் மாற்றியது.

 

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஜோர்டானின் புவியியல் அமைப்பு மிகவும் சாதகமாக அமைந்ததே, ஈரானின் கோபப் பார்வை ஜோர்டான் பக்கம் திரும்ப முக்கியக் காரணமாகும்.

 

நேற்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 19), இஸ்ரேலின் எய்லாட் (Eilat) நகருக்கு அருகாமையில்

 

உள்ள ஜோர்டானிய நகரமான அகபாவை (Aqaba) நோக்கிச் சீறிப்பாய்ந்து வந்த ஈரானிய ஏவுகணையை இஸ்ரேலிய மற்றும் ஜோர்டானியப் படைகள் நடுவானில்

 

இடைமறித்து (Intercepté) அழித்தன. தங்களை நோக்கி வந்த மேலும் 3 ஈரானிய ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும்,

 

4-ஆவது ஏவுகணை தெற்குப் பகுதியின் பாலைவனத்தில் (Zone désertique) விழுந்து வெடித்ததாகவும் ஜோர்டான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

“அமெரிக்கப் படைகளுக்கு இடமளிப்பதன் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு நன்மைகளை விட, அதற்காகக் கொடுக்க வேண்டிய

 

அரசியல் மற்றும் உயிர் விலை மிக அதிகம் என்பதை ஜோர்டானுக்கு உணர்த்துவதே ஈரானின் இந்தத் தாக்குதல்களின் முக்கிய நோக்கமாகும்,”

 

என அமெரிக்க வான்படையின் முன்னாள் அதிகாரி ஒருவர் ‘நியூயார்க் டைம்ஸ்’ (New York Times) நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin