இலங்கை கறுவாத் தொழில்துறையில் வரலாற்றுச் சாதனை: ஒரு கிலோ கறுவா ரூ.7,000

இலங்கையின் கறுவாத் தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகச்சிறந்த வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, கடந்த மே மாதத்தில் கறுவா மிக உயர்ந்த விலையைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, அல்பா (Alba) ரக கறுவா ஒரு கிலோகிராமின் விலை 7,000 ரூபாயாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
2025ஆம் ஆண்டில் கறுவா மற்றும் கறுவா சார்ந்த தயாரிப்புகள் மூலம் அதாவது 260 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 80 பில்லியன் ரூபாய்) ஏற்றுமதி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது இலங்கையின் கறுவாத் தொழில்துறை வரலாற்றில் பதிவான அதிகூடிய வருடாந்த வருமானம் ஆகும்.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருமானம் 27 மில்லியன் ரூபாயினால் அதிகரித்துள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர தெரிவித்தார்.
இந்த ஆண்டு கறுவா ஏற்றுமதி மூலம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொள்ள இலங்கை இலக்கு நிர்ணயித்துள்ளது.
இலங்கையின் “கறுவா தங்க அறுவடை” உலகச் சந்தையில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin