யாழில் 30க்கும் மேற்பட்ட யாசகர்கள் அகற்றப்பட்டனர்;

சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தியமையும் அம்பலம்!
யாழ்ப்பாண நகரில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் யாசகம் என்ற பெயரில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளனர்.
வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண நகரின் சுத்தம், ஒழுங்கு மற்றும் சுற்றுலா நட்பு சூழலை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கூறினார்.
📍 சோதனை நடத்தப்பட்ட பகுதிகள்:
▪️ யாழ்ப்பாணக் கோட்டை சுற்றுவட்டம்
▪️ மத்திய பேருந்து நிலையம்
▪️ கஸ்தூரியார் வீதி
▪️ மின்சார நிலைய வீதி
▪️ யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சுற்றுப்பகுதி
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸாரும் மாநகர சபையும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களது விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில சிறுவர்கள் யாசக நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும்,
அவர்களின் பாதுகாவலர்களுக்கு எச்சரிக்கை வழங்கி, உறுதிமொழி பெற்ற பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin