France – Paraguay போட்டியில் குறுக்கிடக் காத்திருக்கும் இயற்கையின் சீற்றம்! 42 °C வெப்பமும் இடிமழையும்!

2026 உலகக் கிண்ணம்: France – Paraguay போட்டியில் குறுக்கிடக் காத்திருக்கும் இயற்கையின் சீற்றம்! 42 °C வெப்பமும் இடிமழையும்!

Sweden அணியைத் துவம்சம் செய்துவிட்டு உலகக் கிண்ணத்தின் பதினாறு அணிகள் சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்துள்ள France அணி, அடுத்ததாக பலம் வாய்ந்த Paraguay அணியை எதிர்கொள்ளக் காத்திருக்கிறது. ஆனால், இந்தப் போட்டியில் France அணிக்கு மாபெரும் சவாலாக இருக்கப்போவது எதிரணி மட்டுமல்ல, சுட்டெரிக்கக் காத்திருக்கும் இயற்கையின் சீற்றமும்தான்!

Germany அணியை அதிர்ச்சித் தோல்வியடையச் செய்த Paraguay அணியுடனான இந்த வாழ்வா சாவா போட்டி , வருகிற சனிக்கிழமை (ஜூலை 4) பிரான்சு நேரப்படி நள்ளிரவு 11 மணிக்குத் தொடங்குகிறது. ஆட்டம் நடைபெறும் அமெரிக்காவின் Philadelphia நகரில் அப்போது உள்ளூர் நேரம் மாலை 5 மணி. அந்த நேரத்தில் மைதானம் ஒரு நெருப்புச் சூளையாகக் கொதித்துக்கொண்டிருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க வானிலை ஆய்வாளர்களின் கணிப்பின்படி, மைதானத்தின் வெப்பநிலை 41 முதல் 42 °C வரை விண்ணை முட்டும் அளவிற்குக் கொடூரமாக இருக்கும்! இந்த உச்சக்கட்ட வெப்பத்தில் வீரர்கள் களமிறங்கித் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதே (Warm-up) ஒரு மாபெரும் போராட்டமாக அமையும். இதை மெய்ப்பிக்கும் விதமாக Météo France மையமும் 39 °C வெப்பத்துடன் கடுமையான சூறாவளிக் காற்றும் வீசும் என எச்சரித்துள்ளது.

வெப்பம் ஒருபுறம் வாட்டி வதைக்க, மறுபுறம் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய பயங்கரமான கனமழை மைதானத்தைத் தாக்கும் அபாயமும் நிலவுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை இடி, மின்னல் குறித்து மிகக் கடுமையான பாதுகாப்பு விதிகள் உள்ளன. இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், ஆட்டம் உடனடியாக நிறுத்தப்படும்!

இதற்கு முன்பாக இதே Philadelphia மைதானத்தில் கடந்த ஜூன் 22-ஆம் நாள் Iraq அணிக்கு எதிராக France விளையாடிய ஆட்டமும் இத்தகைய இடிமழையால் பாதியில் நிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது Kylian Mbappé உள்ளிட்ட வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் ஆடைமாற்றும் அறையிலேயே (Dressing room) முடங்கிக் கிடக்க நேரிட்டது! சனிக்கிழமையன்றும் அதே போன்றதொரு இக்கட்டான நிலை உருவாக அதிக வாய்ப்புள்ளது

ஏற்கனவே பிரான்சு நேரப்படி நள்ளிரவு 11 மணிக்குத் தொடங்கும் இந்த ஆட்டம், இயற்கையின் சீற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்டால், இரசிகர்கள் விடிய விடியக் கண்விழிக்க நேரிடும்!

ஆட்டத்தின் பரபரப்பும், இயற்கையின் கோரத்தாண்டவமும் இணைந்து சனிக்கிழமை இரவை ஓர் உறக்கமில்லா இரவாக மாற்றப் போவது உறுதி!

Recommended For You

About the Author: admin