அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (24) வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்றுவிகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 330.35 ரூபாயாகவும், விற்பனை விலை 340.06 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

