தோஹாவில் இலங்கை வீரன் சாதனை: 88.68m தூரம் ஈட்டி எறிந்து ருமேஷ் தரங்க அபார வெற்றி!
கத்தாரில் நடைபெற்ற தோஹா டைமண்ட் லீக் (DohaDL) தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதல் (Javelin Throw) பிரிவில், இலங்கையின் ருமேஷ் தரங்க பதிரகே முதலிடம் பிடித்து மாஸ் காட்டியுள்ளார்!
தனது ஈட்டியை 88.68 மீட்டர் தூரத்திற்கு அசாத்தியமாகப் பறக்கவிட்டு இந்த வெற்றியை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

