World Cup வரலாற்றில் ஒரு விசித்திரமான சம்பவம்: நடுவருக்கே ஏற்பட்ட ‘தசைபிடிப்பு’ (Cramp)!
2026 World Cup தொடரின் குரூப் டி (Group D) பிரிவில் நடைபெற்ற USA மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான போட்டியின் இறுதி நிமிடங்களில் ஒரு சுவாரசியமான காட்சி அரங்கேறியது.
ஜெர்மனியைச் சேர்ந்த நடுவர் ஃபீலிக்ஸ் ஸ்வயர் (Felix Zwayer) திடீரென காலில் கடுமையான தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு மைதானத்திலேயே அமர்ந்தார். உடனடியாக ஓடிவந்த ஆஸ்திரேலிய அணியின் எய்டன் ஓ’நீல், அமெரிக்க வீரர் ஃபோலரின் பலோகன் மற்றும் உதவி நடுவர்கள் அவரது காலைத் தூக்கி தசைப்பிடிப்பை சரிசெய்ய உதவினர்.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், “வீரர்கள் தசைப்பிடிப்பால் அவதிப்படுவதைப் பார்த்திருக்கிறோம், ஆனால் நடுவருக்கே Cramp வந்ததை இப்போதுதான் பார்க்கிறோம்!”
என கலகலப்பாகப் பகிர்ந்து வருகின்றனர். இப்போட்டியில் அமெரிக்க அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

