ஆசிய சாம்பியன் கத்தாரின் உலகக் கோப்பை சோகம்: இதுவரை ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் திணறல்!

ஆசிய சாம்பியன் கத்தாரின் உலகக் கோப்பை சோகம்: இதுவரை ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் திணறல்!

ஆசிய கால்பந்து அரங்கில் அசுர பலம் கொண்ட அணியாகத் திகழும் கத்தார், FIFA World Cup மேடையில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்ய முடியாமல் தொடர்ந்து தடுமாறி வருகிறது.

2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை ஆசிய சாம்பியன் (Back-to-Back Asian Champions) பட்டத்தை வென்ற கத்தார் அணி, உலகக் கோப்பையில் விளையாடிய 5 போட்டிகளிலும் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளது.

2022 உலகக் கோப்பை (சொந்த மண்ணில்):

vs ஈக்வடார்:0-2 என்ற கணக்கில் தோல்வி
vs செனகல்:1-3 என்ற கணக்கில் தோல்வி
vs நெதர்லாந்து:0-2 என்ற கணக்கில் தோல்வி
(சொந்த நாட்டில் நடைபெற்ற தொடரிலேயே குரூப் சுற்றோடு வெளியேறியது)

நடப்பு 2026 FIFA World Cup தொடரில்:

vs சுவிட்சர்லாந்து:1-1 என்ற கணக்கில் போராடிப் பெற்ற சமன் (Draw)

vs கனடா:0-6 என்ற கணக்கில் மிக மோசமான இமாலயத் தோல்வி

ஆசிய கண்டத்தில் அசுர பலத்துடன் வலம் வரும் கத்தார் அணி, உலகத் தரம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக விளையாடும் போது தங்களது பலத்தை நிரூபிக்க முடியாமல் திணறி வருவது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin