முந்தைய சாதனைகளை முறியடித்த சிவப்பு அட்டைகள்: 2026 FIFA World Cup தொடரில் நடுவர்களின் அதிரடி நடவடிக்கை!

முந்தைய சாதனைகளை முறியடித்த சிவப்பு அட்டைகள்: 2026 FIFA World Cup தொடரில் நடுவர்களின் அதிரடி நடவடிக்கை!

நடப்பு 2026 FIFA World Cup தொடர் தொடங்கி சில நாட்களிலேயே, முந்தைய முழு உலகக் கோப்பை தொடர்களை விட அதிக சிவப்பு அட்டைகள் (Red Cards) காட்டப்பட்டு புதிய சாதனை பதிவாகியுள்ளது.

மைதானத்தில் வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டமும், நடுவர்களின் கடுமையான விதிமுறை அமலாக்கமும் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

2018 FIFA World Cup (ரஷ்யா):

அந்தத் தொடர் முழுவதுமாக விளையாடப்பட்ட அனைத்துப் போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 4 சிவப்பு அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டன.

2022 FIFA World Cup (கத்தார்):

முந்தைய தொடரைப் போலவே கத்தாரிலும் முழுத் தொடரையும் சேர்த்து மொத்தம் 4 சிவப்பு அட்டைகள் மட்டுமே காட்டப்பட்டன.

2026 FIFA World Cup (நடப்பு தொடர்):

ஆனால், இந்த முறை தொடரின் ஆரம்பக் கட்டத்திலேயே ஏற்கனவே 5 சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டு, கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையையும் முறியடித்துள்ளது

நேற்றைய கத்தாருக்கு எதிரான போட்டியில் கூட கனடா அணிக்கு எதிராக விளையாடிய கத்தார் வீரர்கள் இருவர் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி நடவடிக்கைகள் வரவிருக்கும் போட்டிகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin