66 ஆண்டுகளுக்கு முன்பே 2026-ஐப் பற்றி கணித்த விஞ்ஞானி!
1960-ஆம் ஆண்டிலேயே உலகின் எதிர்காலம் குறித்து வியக்க வைக்கும் கணிதக் கணிப்பை வெளியிட்டார் இயற்பியலாளர் ஹெய்ன்ஸ் வான் ஃபோர்ஸ்டர்!
அவரது கணிப்பில் 2026 நவம்பர் 13 ஒரு முக்கியமான தேதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிவேகமாக அதிகரிப்பதை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கணிப்பு, தற்போது மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அப்படியென்றால், நவம்பர் 13-ல் என்ன நடக்கப்போகிறது? இது உலக அழிவுக்கான கணிப்பு அல்ல; மக்கள் தொகை வளர்ச்சி குறித்த கணித மாதிரியின் அடிப்படையிலான எச்சரிக்கையே!

