பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் விடுத்த அழைப்பின் பேரில், G7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமீரக அதிபர் ஷேக் முகமது அவர்கள் ஏவியன்-லெ-பெய்ன்ஸ் நகருக்கு சென்றுள்ளார்.
அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அமீரக அதிபர் ஷேக் முகமது அவர்கள் சந்தித்தார்.
இரு தலைவர்களும், அமீரகம் – அமெரிக்கா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும், மத்திய கிழக்கில் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலைகள் குறித்தும் இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்

