இலங்கை மகளிர் அணி அபார வெற்றி

நடப்பு செம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில், நடப்பு செம்பியனான நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து 151 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

நெருக்கடிக்கு மத்தியிலும் மிகச் சிறந்த முறையில் ஓட்டங்களை விரட்டி சென்ற இலங்கை அணியை, நிலக்ஷிகா சில்வாவின் பொறுப்பான ஆட்டம் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இந்த தோல்வியின் காரணமாக நியூசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு கடினமாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin