இஸ்ரேல் தேர்தலில் பெரும்பான்மை இழந்த நெதன்யாகு; அரபுக் கட்சிகள் மீது தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டு!

இஸ்ரேல் தேர்தலில் பெரும்பான்மை இழந்த நெதன்யாகு; அரபுக் கட்சிகள் மீது தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டு!

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுத் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளபோதும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளது.

120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 61 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில், நெதன்யாகு கூட்டணிக்கு 53 ஆசனங்களும், எதிரணிக்கு 48 ஆசனங்களும் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அரபுக் கட்சிகள் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக லிகுத் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், மிரட்டல் மற்றும் இரட்டை வாக்குப்பதிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை கோரப்பட்டுள்ளது.

அரபுக் கட்சிகளின் ஆதரவு ஆட்சியமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என்பதால், இஸ்ரேல் அரசியலில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.

Recommended For You

About the Author: admin