“நவம்பர் 3: டிரம்புக்கு பெரும் சோதனை!” – அமெரிக்க காங்கிரஸ் யார் கையில்? 

“நவம்பர் 3: டிரம்புக்கு பெரும் சோதனை!” – அமெரிக்க காங்கிரஸ் யார் கையில்?

அமெரிக்காவில் நவம்பர் 3 அன்று இடைக்காலத் தேர்தல் (Midterm Elections) நடைபெறுகிறது! டிரம்ப் நேரடியாகப் போட்டியிடவில்லை.

ஆனாலும், அவரது அடுத்த 2 ஆண்டு ஆட்சியின் தலைவிதியை இந்தத் தேர்தலே தீர்மானிக்கப் போகிறது!

பிரதிநிதிகள் சபை (House): 435 இடங்கள், பெரும்பான்மைக்கு 218 தேவை. இப்போது டிரம்பின் குடியரசுக் கட்சி 218, ஜனநாயகக் கட்சி 214. வெறும் சில இடங்களே வித்தியாசம்!

செனட் (Senate): 100 இடங்கள், பெரும்பான்மைக்கு 51 தேவை. இப்போது குடியரசுக் கட்சி 53, ஜனநாயகக் கட்சி 47.

கருத்துக்கணிப்பு (Polls): House-ஐ ஜனநாயகக் கட்சி கைப்பற்ற 95% வாய்ப்பு. Senate-ஐக் கைப்பற்ற 57% முதல் 76% வரை வாய்ப்பு (Silver Bulletin, DDHQ).

கடும் போட்டி மாநிலங்கள்: டெக்சாஸ் (Texas), மெய்ன் (Maine), ஒஹாயோ (Ohio), மிச்சிகன் (Michigan), அலாஸ்கா (Alaska), ஐயோவா (Iowa). இங்கு இரு கட்சிகளுக்கும் இடையிலான வித்தியாசம் 4%-க்கும் குறைவு!

இப்போதைய நிலை: ஜனநாயகக் கட்சி காங்கிரஸைக் கைப்பற்றினால், டிரம்பின் சட்டங்கள், வரவு-செலவுத் திட்டம்,

போர் முடிவுகள் அனைத்தையும் தடுக்கும் சக்தி அவர்களுக்குக் கிடைக்கும். குடியரசுக் கட்சி தக்கவைத்தால்,

டிரம்புக்கு முழு அதிகாரம் தொடரும்! முடிவுகள் டென்மார்க் நேரப்படி நவம்பர் 4 அதிகாலையிலிருந்து வரத் தொடங்கும்.

Recommended For You

About the Author: admin