4,399 நாட்கள்… இந்தியாவின் ‘நீண்ட கால’ பிரதமர்! அசைக்க முடியாத சாதனையை படைத்த மோடி!
அபுதாபியின் ஆட்சியாளரான அவர் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் மிக நீண்ட காலம் பணியாற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பொறுப்பேற்றுள்ள @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்தியாவின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை வழிநடத்துவதில் நீங்கள் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
மேலும் நமது நாடுகள் மற்றும் மக்களின் நலனுக்காக நமது விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை (Comprehensive Strategic Partnership) மேலும் வலுப்படுத்த ஆவலோடு எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த மோடி, “எனது சகோதரரே, உங்களது அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்களது தொலைநோக்கு தலைமையின் கீழ் இந்தியா-யுஏஇ விரிவான மூலோபாயக் கூட்டாண்மை புதிய உயரங்களை எட்டியுள்ளது.
நமது நட்பை நான் பெரிதும் மதிக்கிறேன், மேலும் நமது நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக இணைந்து செயல்பட எதிர்நோக்கியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்..

