மத்திய கிழக்கு நாடுகளில் 3 லட்சம் சைபர் செக்யூரிட்டி வேலைகளுக்குத் தட்டுப்பாடு!

மத்திய கிழக்கு நாடுகளில் 3 லட்சம் சைபர் செக்யூரிட்டி வேலைகளுக்குத் தட்டுப்பாடு! ஐடி துறையினருக்கு ஜாக்பாட்!

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கு இணையான சைபர் செக்யூரிட்டி (Cybersecurity) வல்லுநர்களுக்குக் கடும் பற்றாக்குறை நிலவி வருவதாக மாஸ்டர்கார்டு (Mastercard) அறிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது யுஏஇ உள்ளிட்ட நாடுகளில் சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் 43% நிறுவனங்கள் போதிய செக்யூரிட்டி டீம் இல்லாமல் தவித்து வருகின்றன. ஹேக்கர்களின் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், தகுதியான ஐடி வல்லுநர்களைத் தேடி நிறுவனங்கள் காத்துக் கிடக்கின்றன.

சைபர் செக்யூரிட்டி துறையில் இருக்கும் இந்திய மற்றும் தமிழ் ஐடி இளைஞர்களுக்கு இது வளைகுடா நாடுகளில் மிகச்சிறந்த வேலைவாய்ப்புக்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது!

Recommended For You

About the Author: admin