அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் அமைந்திருக்கும் ‘லாப் டிஸ்ட்ரிபியூட்டர்’ (Laugfs Distributor) நிறுவனத்திற்கு அருகில் உள்ள பழைய பொருட்கள் வாங்கும் நாடங்கடையில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டு, தீ மிக வேகமாகப் பரவியதால் அப்பகுதியில் பெரும் பாதிப்பும் பதற்றமும் நிலவியது.
இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உடனடியாக சம்பவ இடத்திற்கு விஜயம் செய்ததுடன், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் மற்றும் அம்பாறை நகர சபையின் தீயணைப்பு வாகனம் ஆகியவற்றை அவசரமாக வரவழைத்தார்.
எனினும், தீயணைப்பு வாகனங்கள் மூலம் ஆரம்பத்தில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாதவாறு தீ தொடர்ந்து தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்தது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அதிகாரிகள், உடனடியாக அக்கரைப்பற்று பிரதேச சபையின் ஜேசிபி (JCB) இயந்திரத்தை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, அதன் உதவியுடன் தீ பரவும் வழித்தடங்களைத் துண்டித்த பின்னரே தீயை கடும் சிரமத்திற்கு மத்தியில் முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்


