மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் தொடரும் அகழ்வுப் பணிகள்!

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் தொடரும் அகழ்வுப் பணிகள்!

எட்டாவது நாளிலும் குறிப்பிடத்தக்க தடயங்கள் கிடைக்கவில்லை.

மட்டக்களப்பு, குருக்கள்மடம் கடற்கரை வீதியிலுள்ள தனியார் காணியொன்றில் மனிதப் புதைகுழி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள், 2026 ஒக்டோபர் 13ஆம் திகதி எட்டாவது நாளாகவும் தொடர்ந்தன.

களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த ஆய்வில், தொல்பொருள், தடயவியல் மற்றும் மானுடவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு எட்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை சந்தேகத்திற்கிடமான குறிப்பிடத்தக்க தடயங்கள் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin