கிளிநொச்சி இந்துக் கல்லூரி வட மாகாண கராத்தே போட்டிகளில் (Team Kumite) மகளிர் பிரிவு சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் கராத்தே மகளிர் அணி, வட மாகாண மட்டப் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அணியின் வீராங்கனைகளான
K. கிருபாலினி
S. கவினா
K. ஷாலினி
ஆகியோர் தங்களது திறமையாலும் அர்ப்பணிப்பாலும் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளனர்.
மேலும், கிளிநொச்சி இந்துக் கல்லூரி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக (2025 மற்றும் 2026) சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
மாகாணப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று கல்லூரிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த நமது குழு கராத்தே அணி வீராங்கனைகளுக்கும், அவர்களை திறம்பட வழிநடத்திய பயிற்றுவிப்பாளர் தர்ஷன் அவர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உங்களின் தொடர்ச்சியான பயிற்சியும் அர்ப்பணிப்பும் தேசிய மட்ட வெற்றிகளை நோக்கி உங்களை முன்னேற்றும் என்பதில் நம்பிக்கை கொள்கின்றோம். மேலும் பல சாதனைகளைப் படைத்து கல்லூரிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்.
வாழ்த்துகள் வீராங்கனைகளே! வாழ்த்துகள் பயிற்றுவிப்பாளரே!

