‘பிள்ளையான்’ உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் அக்டோபர் 27 வரை நீட்டிப்பு!
மட்டக்களப்பில் 2008-இல் காவல்துறை உத்தியோகத்தர் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய விசாரணையில் பிள்ளையான் காணொளி வாயிலாகவும், ஏனைய இரு சந்தேகநபர்களும் நேரிலும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
மேலும், லண்டனில் வசிக்கும் முகமட் பாய்ஸ் என்ற மற்றொரு சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றம் தொடர்ந்து பிடியாணை பிறப்பித்துள்ளது.

