கூடுதல் வரி விதிப்பிலும் குறையாத வாகன இறக்குமதி: சுங்கத் திணைக்களம் அறிக்கை!

கூடுதல் வரி விதிப்பிலும் குறையாத வாகன இறக்குமதி: சுங்கத் திணைக்களம் அறிக்கை!

இவ்வருட தொடக்கத்தில் கூடுதல் வரி விதிக்கப்பட்ட போதிலும், நாட்டில் வாகன இறக்குமதி எதிர்பார்த்தளவு குறையவில்லை என இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தையில் பெருமளவிலான வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தாலும், இறக்குமதி நடவடிக்கைகள் சீராக உள்ளதாகச் சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

 

சுங்கத் திணைக்களத்தின் மொத்த வருமானத்தில் சுமார் 30 சதவீத பங்களிப்பை வாகன இறக்குமதியே வழங்குகிறது. கடந்த மே மாதம் 28ஆம் திகதி வரை ஈட்டப்பட்ட 212 பில்லியன் ரூபா மொத்த வருமானத்தில், 76 பில்லியன் ரூபா வாகனங்கள் மூலமே கிடைத்துள்ளது.

 

மத்திய கிழக்கு போர் காரணமாக டொலர் மதிப்பு உயர்ந்துள்ளதால், சுங்க வரியின் ரூபா மதிப்பு அதிகரித்து அரசாங்கத்தின் வருமானம் மேலும் உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin