சாரதியின் கவனயீனத்தால் பறிபோன 6 வயது மாணவியின் உயிர்

மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது மாணவி ஒருவர் பேருந்திலிருந்து கீழே தவறி விழுந்து பின், அதே சில்லுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

(21) தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து, பாடசாலைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்ற பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், கொடஉட பிரதேசத்தை சேர்ந்த சனுதி சேனாரா என்ற 6 வயதுடைய சிறுமி ஆவார்.

திக்வெல்ல வடக்கு மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் அவர், காலையில் பாடசாலை செல்வதற்காக தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

மாத்தறையில் இருந்து மித்தெனிய நோக்கிச் சென்ற தனியார் பேருந்துக்கு கை காட்டி, அவர்கள் அதன் முன்கதவு வழியாக அதில் ஏற முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் தாயாரும் சகோதரனும் பேருந்தில் ஏறியதை அடுத்து, இரண்டாவதாக #சிறுமி பேருந்தில் ஏற முற்பட்டவுடன் பேருந்து முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

இதன் போது அந்த சிறுமி பேருந்திலிருந்து கீழே தவறி விழுந்து அதே பேருந்தின் பின் சக்கரத்திற்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முன் கதவால் ஏறிய இந்த மாணவி கீழே தவறி விழுந்த போது அந்த சாரதிக்கு இது தெரியவில்லையா சாரதி நினைத்திருந்தால் இந்த மாணவியின் #உயிரை காப்பாற்றி இருக்கலாம்… உங்கள் அவசரத்துக்கு ஒரு பிஞ்சு உயிரைப் பறித்து விட்டீர்களே..

🛑மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, பேருந்தில் ஏறும் பயணிகள் (குறிப்பாகச் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள்) முற்றாக உள்ளே சென்று பாதுகாப்பாக நிற்கும் வரை பேருந்தை எக்காரணம் கொண்டும் நகர்த்தக் கூடாது.. இதை இப்போதைய சாரதிகள் ஏன் கடைபிடிப்பதில்லை..?

🛑சாரதிகளே.. உங்களின் அதீத நேரப் போட்டியும் (Time-keeper Race) அவசரமும் இன்று ஒரு பிஞ்சு உயிரைப் பலிகொண்டுள்ளது..

🛑பெற்றோர்களே.. சிறு பிள்ளைகளுடன் பேருந்துகளில் ஏறும் போது, தாயாரோ அல்லது தந்தையோ பிள்ளையை முதலில் ஏற்றிவிட்டுப் பின்னால் நீங்கள் ஏறுங்கள்.

🛑மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவசரப்பட்டு நகரும் பேருந்துகளில் ஏறுவதையோ, கதவருகே தொங்கிக் கொண்டு பயணிப்பதையோ முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

🛑பேருந்துச் சாரதிகளே… உங்களின் அவசரப் போட்டிக்கு எத்தனையோ கு*டும்பங்களின் தூண்கள் சாய்கின்றன, கதவருகே நிற்கும் பிள்ளைகளை உங்கள் சொந்தப் பிள்ளையாக எண்ணி வாகனம் செலுத்துங்கள்..!

Recommended For You

About the Author: admin