எதிர்வரும் ஜூலை 31 முதல் ஓ கஸ்ட் 17 வரைதொடர்ச்சியாக 18 நாட்களுக்குத் தடம் 13 (Ligne 13) சுரங்கத் தொடருந்துச் சேவை நிறுத்தப்படவுள்ளது.
‘சென்ட்-டெனிஸ்-பல்கலைக்கழகம்’ (Saint-Denis-Université) மற்றும் ‘போர்ட் து செந்துவான்’ (Porte de Saint-Ouen) நிலையங்களுக்கு இடையே போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்படவுள்ளது.
பாரிஸ் போக்குவரத்து வலைப்பின்னலிலேயே (Réseau parisien) மிகவும் நெரிசலானதும், அடிக்கடி பழுதாகும் தடங்களில் ஒன்று தடம் 13. எனவே, இதனை நவீனப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். புதிய வகை ‘எம்.எப் 19’ (MF19) தொடருந்துகளை அறிமுகப்படுத்தவும், ஏற்கனவே 1, 14 மற்றும் 4 ஆகிய தடங்களில் உள்ளது போல இதையும் முழுமையான தானியங்கி முறைக்கு (Automatisation complète) மாற்றுவதற்குமே இந்த மாபெரும் உள்கட்டமைப்புச் சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இந்த நவீனமயமாக்கலை சென் டெனி நகர சபை முழுமையாக ஆதரித்தாலும், அது குடிமக்களின் அன்றாட வாழ்வைக் கடுமையாகப் பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.
எனவே, ‘ஆர்.ஏ.டி.பி’ (RATP) மற்றும் ‘இல-து-பிரான்சு மொபிலிட்டீஸ்’ (Île-de-France Mobilités) ஆகிய போக்குவரத்து நிர்வாகங்களிடம் இப்பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளைச் சுட்டிக்காட்டி நகர சபை தொடர்ந்து வலுவான அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த 18 நாட்களில் ‘சென் -டெனி-பல்கலைக்கழகம்’ மற்றும் ‘லா ஃபோர்ச்’ (La Fourche) இடையே எந்தவொரு சுரங்கத் தொடருந்தும் இயங்காது. இதற்கு மாற்றாக, பயணிகளின் வழக்கமான கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் போதிய அளவிலான மாற்றுப் பேருந்துகளை (Bus de remplacement) இயக்க வேண்டும் என சென் டெனி நகர சபை வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, பயணிகள் தங்களின் மாற்றுப் பயணத் திட்டங்களை (புறநகர்த் தொடருந்து – RER, நகரத் தொடருந்து – Tramway, மாற்றுத் தடங்கள், நடைப்பயணம் அல்லது மிதிவண்டி) முன்கூட்டியே திட்டமிட ‘Bonjour RATPசெல்பேசிச் செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

