2,144 மில்லியன் ரூபா செலவில் அனுராதபுரம் தெற்கு நவீன போக்குவரத்து மத்திய நிலையம்!

2,144 மில்லியன் ரூபா செலவில் உருவாகும் அனுராதபுரம் தெற்கு நவீன போக்குவரத்து மத்திய நிலையம்!

பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அனுராதபுரம் தெற்கு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள், தற்போது நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

2,144 மில்லியன் ரூபா செலவில் மீள ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், நவீன பேருந்து முனையம் மற்றும் ‘டச் அண்ட் கோ’ (Touch & Go) பகுதிகளைக் கொண்டுள்ளது.

 

மேலும், புதிய அனுராதபுரம் ரயில் நிலையம் வான்வழி மேம்பாலம் ஊடாக இதனுடன் இணைக்கப்படவுள்ளதுடன், பயணிகளுக்கான தங்குமிடங்கள், வர்த்தக வளாகங்கள் மற்றும் உணவகங்களும் இங்கு அமைக்கப்படவுள்ளன.

 

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அண்மையில் இப்பணிகளை நேரில் ஆய்வு செய்ததுடன், இதன் மூலம் நகரின் போக்குவரத்து நெரிசல் முற்றாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin