கச்சா எண்ணெய் விலை சரிவு!

கச்சா எண்ணெய் விலை சரிவு! அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி

ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் குறித்து வெள்ளை மாளிகை நம்பிக்கை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, இன்று காலை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவைக் கண்டுள்ளன.

 

பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை 44 காசுகள் குறைந்து 94.49 டாலராகவும், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் விலை 70 காசுகள் சரிந்து 90.59 டாலராகவும் வர்த்தகமானது.

 

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் டெஹ்ரானில் மேற்கொண்டு வரும் சமரச முயற்சிகள், இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகளில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

போர் பதற்றம் குறையும் என்ற எதிர்பார்ப்பால் ஆசியப் பங்குச்சந்தைகள் இன்று உற்சாகத்துடன் காணப்பட்டன.

 

தென் கொரியாவின் கோஸ்பி (Kospi) குறியீடு 1.89 சதவீதமும், ஹாங்காங்கின் ஹாங் செங் (Hang Seng) 0.68 சதவீதமும் உயர்வைக் கண்டன.

 

மேலும், தைவான் மற்றும் ஜப்பான் சந்தைகளும் கணிசமான லாபத்தைப் பதிவு செய்துள்ளன. ஹார்முஸ் நீரிணை முடக்கம் நீங்கி, எண்ணெய் விநியோகம் சீராகும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin