அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: துருக்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமான முறையில் அமைய வேண்டும் எனத் துருக்கி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்துத் துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நிலவும் தற்காலிகப் போர்நிறுத்தம் ஒரு நிரந்தர அமைதி உடன்படிக்கையாக மாறத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உறுப்பினராகவும், ஈரானின் அண்டை நாடாகவும் உள்ள துருக்கி, அமெரிக்கா மற்றும் மத்தியஸ்த நாடான பாகிஸ்தானுடன் இணைந்து இந்தப் போர் நிறுத்த முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
வரும் வார இறுதியில் துருக்கியின் அந்தால்யா மாகாணத்தில் நடைபெறவுள்ள இராஜதந்திர மாநாட்டின் இடையே, துருக்கி, பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இந்தப் போர் விவகாரம் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ள இச்சந்திப்பில் பங்கேற்கப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கத்தாரில் இருந்து நேரடியாகத் துருக்கி வரவுள்ளார்.
சிக்கலான அரசியல் சூழல்களைத் தாண்டி, பிராந்தியத்தில் ஒரு நிரந்தர அமைதியைக் கொண்டு வருவதே இந்த உயர்மட்டச் சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.

