கடலுக்கடியில் பாலியல் தொல்லை..! “தண்ணீரில் கூட பாதுகாப்பில்லையா”..?

கடலுக்கடியில் பாலியல் தொல்லை..! “தண்ணீரில் கூட பாதுகாப்பில்லையா”..? ஸ்கூபா டைவிங்கின் போது பெண்ணிடம் அத்துமீறிய பயிற்சியாளர். கொடூர வீடியோ..!

Egypt – ஸ்கூபா டைவிங் பயிற்சியின்போது, பயிற்சியாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகப் பெண் பயணி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

 

அதாவதுதனியாகப் பயணம் மேற்கொண்டு வரும் ரஷா மெடியன் என்பவர், எகிப்தில் ஸ்கூபா டைவிங் கற்றுக்கொள்ளும் அனுபவத்தைப் பதிவு செய்ய முயன்றார். அப்போது பயிற்சியாளர் தன்னிடம் அத்துமீறியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தான் பயிற்சியில் இருந்தபோது எடுக்கப்பட்ட அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

அந்த வீடியோவில், பயிற்சியாளர் ரஷாவைத் தேவையற்ற முறையில் தொடுவதும், அவர் தள்ளிச் செல்ல முயன்றாலும் விடாமல் நெருங்கி வருவதும் பதிவாகியுள்ளது. பயிற்சியின் தொடக்கத்திலிருந்தே அந்த நபரின் செயல்பாடு சந்தேகத்திற்குரியதாக இருந்ததாகவும், அதனால் எச்சரிக்கையுடன் இருந்து அதைத் தான் பதிவு செய்ததாகவும் ரஷா தெரிவித்துள்ளார். மேலும், அந்த பயிற்சியாளர் தன்னை மிகவும் தவறான முறையில் தொட்டதாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

 

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டு வைரலானது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் பல நெட்டிசன்கள், ரஷாவின் துணிச்சலைப் பாராட்டுவதோடு, அந்த பயிற்சியாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைச் சில பெண் பயணிகள் கமெண்டுகளில் பகிர்ந்து வருகின்றனர்.

 

மேலும் ஸ்கூபா டைவிங் பயிற்சியின்போது, மாணவர்களின் சமநிலையை மேம்படுத்தவோ அல்லது உபகரணங்களைச் சரிசெய்யவோ பயிற்சியாளர்கள் சிறிய அளவில் தொடுவது வழக்கம். இருப்பினும், அந்தத் தொடுதல் என்பது பாதுகாப்பை முன்னிட்டு மட்டுமே இருக்க வேண்டும் என்றும், எல்லை மீறிய எந்தவொரு செயலும் தொழில்முறை நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும் டைவிங் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin