சத்தம் போடாம வந்து உயிரை எடுக்கும்..” – ஈரானின் புதிய ‘சைலண்ட்’ கொலைகாரன்.. ரேடாருக்கே சவால் விடும் ஷாஹெத்-101..!!
போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது ‘ஷாஹெத்-101’ என்ற தற்கொலை படை (Kamikaze) ட்ரோனின் புதிய மாடலை வெளியிட்டு உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
இந்த புதிய ட்ரோன், வழக்கமான ட்ரோன்களைப் போல இல்லாமல் மிகவும் அமைதியாகவும், ரேடார்களில் சிக்காதவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக வந்த ட்ரோன்கள் பெட்ரோல் இன்ஜின்கள் மூலம் இயங்கி பெரும் சத்தத்தை எழுப்பின; ஆனால், இந்த புதிய வெர்ஷன் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குவதால், சத்தமே இல்லாமல் எதிரி நாடுகளின் எல்லைக்குள் ஊடுருவித் தாக்கும் வல்லமை பெற்றது.
இந்த ட்ரோனின் விசேஷமே அதன் ‘லோயிட்டரிங்’ (Loitering) வசதிதான். அதாவது, இது வானத்தில் ஒரு கழுகைப் போல வட்டமடித்துக் கொண்டே தனது இலக்கைத் தேடும்; சரியான இலக்கு கிடைத்தவுடன் மின்னல் வேகத்தில் பாய்ந்து வெடித்துச் சிதறும். இதன் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள புரோப்பல்லர் மற்றும் பின்பக்கத்தில் இருக்கும் ராக்கெட் பூஸ்டர் ஆகியவை இதற்கு அதீத வேகத்தைக் கொடுக்கின்றன. “கண்ணுக்குத் தெரியாமல் வந்து உயிரைப் பறிக்கும் இந்த ட்ரோன், நவீனப் போர்க்களத்தின் போக்கையே மாற்றப்போகிறது” என ராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

