பீனிக்ஸ், அரிசோனா (Phoenix, Arizona) நிதிமன்றம் கைதியால் அதிர்ந்தது!
பீனிக்ஸ், அரிசோனா (Phoenix, Arizona) – பெப்ரவரி மாதம் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பான பாதுகாப்பு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.
நீதிமன்றக் கூடத்தில் பதிவாகிய பாதுகாப்பு காட்சிகளில், ஆரஞ்சு நிற சிறை உடை அணிந்திருந்த ஒருவன் திடீரென தனது இடத்திலிருந்து எழுந்து, முன்னால் இருந்த மேடையை தாண்டி நேராக நீதிபதியின் இருக்கை நோக்கி விரைந்ததாகக் காணப்படுகிறது. சில வினாடிகள் அமைதியாக இருந்த நீதிமன்றம், அதன்பின் பரபரப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக நீதிமன்ற காவற்துறை அதிகாரிகள் தங்களது taser கருவிகளை எடுத்துக்கொண்டு முன்வந்து, குறித்த நபரை நீதிபதியின் இருக்கை அடையும்முன் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை தரையில் கட்டுப்படுத்தி, நீதிமன்றக் கூடத்தின் ஒழுங்கை மீட்டெடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
சம்பவத்தின் பின்னணி, குறித்த நபரின் அடையாளம் மற்றும் குற்றச்சாட்டு விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை.


