பில்கேட்ஸ் பகிரங்க மன்னிப்பு

பில்கேட்ஸ் பகிரங்க மன்னிப்பு: எப்ஸ்டினுடனான தொடர்பு குறித்து மனம் திறந்த மைக்ரோசொப்ட் ஸ்தாபகர்!

மைக்ரோசொப்ட் (Microsoft) நிறுவனத்தின் ஸ்தாபகர் பில்கேட்ஸ், மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டினுடனான தனது நட்பு குறித்து அண்மையில் மனம் திறந்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது உலகளவில் பேசு பொருளாகியுள்ளன.

தமது அறக்கட்டளை நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டும் நோக்கில், எப்ஸ்டினைப் பலமுறை சந்தித்ததை பில்கேட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். “அவருடன் நேரத்தைச் செலவிட்டதும், அறக்கட்டளையின் ஊழியர்களைச் சந்திக்க வைத்ததும் என்னுடைய பாரிய தவறு,” என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யப் பெண்களுடனான தனது தொடர்பு குறித்து எழுந்த தகவல்கள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார். தனக்கு ரஷ்யப் பெண்களுடன் இரு தொடர்புகள் இருந்ததை ஏற்றுக்கொண்ட அவர், அந்தப் பெண்கள், எப்ஸ்டினால் பாதிக்கப்பட்டவர்களுடன் எவ்விதத்திலும் தொடர்புடையவர்கள் அல்ல என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தச் செய்தி கடந்த சில நாட்களாக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.

காரணம் எப்ஸ்டின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த பின்னரும் அவருடனான தொடர்பை பேணியமைக்காக பில்கேட்ஸ் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஆகியோரின் விவாகரத்துத் தீர்மானத்திற்கும் இந்த விவகாரங்கள் ஒரு காரணமாக அமைந்ததாகப் பல சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதே சிறந்த தலைமைத்துவப் பண்பு என ஒரு தரப்பினர் பில்கேட்ஸைப் பாராட்டும் அதேவேளை, ஒரு உலகப் புகழ்பெற்ற மனிதர் இவ்வாறான நபர்களுடன் தொடர்பு வைத்திருந்தது பெரும் தவறு என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Recommended For You

About the Author: admin