அமெரிக்கா – சீனா இடையேயான தொழில்நுட்ப ஆதிக்கப் போட்டி

அமெரிக்கா – சீனா இடையேயான தொழில்நுட்ப ஆதிக்கப் போட்டி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செமிகண்டெக்டர் துறைகளைத் தாண்டி தற்போது மூளை-கணினி இண்டர்பேஸ் (BCI) தொழில்நுட்பத்திலும் தீவிரமடைந்துள்ளது.

மனித மூளையின் மின் சமிக்ஞைகளை கணினி புரிந்துகொள்ளும் கட்டளைகளாக மாற்றும் இந்த நரம்புத் தொழில்நுட்பம், சிந்தனையின் மூலம் வெளிப்புற சாதனங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆரம்ப நிலையில் இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி வேகமெடுத்து வருகிறது.

சமீபத்திய முன்னேற்றங்களால், ALS போன்ற நரம்பியல் பாதிப்புக்குள்ளான நோயாளிகள் மூளைச் சமிக்ஞைகள் மூலம் தட்டச்சு செய்தல், உரையாடல் மற்றும் வீடியோ கேம்களை இயக்குதல் போன்ற செயல்களை மேற்கொள்ள முடிகிறது.

மேலும், எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய மூளைக்குள் பொருத்தப்படும் இம்ப்ளான்ட் சாதனங்கள், இந்தத் தொழில்நுட்பத்தின் மீது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன

Recommended For You

About the Author: admin