2026 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் குறித்து AI மாதிரிகளின் முக்கிய பதிவு!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நெருங்கியுள்ளன.

இந்த முக்கியமான கட்டத்தில், பல்வேறு AI மாதிரிகள் இந்தத் தொடருக்கான வெற்றியாளர்களைக் கணித்துள்ளன.

இந்தத் தொடரில் எஞ்சியுள்ள நான்கு அணிகளான பிரான்ஸ், அர்ஜென்டினா, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றைப் பற்றி யுஐ மாதிரிகள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தாலும், வெற்றியாளர் மற்றும் ஏனைய இடங்கள் குறித்த கணிப்புகளில் சிறிய மாற்றங்கள் உள்ளன.

5 AI மாதிரிகளான(Gemini,Grock,DeepSeek,Le Chat,Qwen) என்பன பிரான்ஸை செம்பியனாக கணித்துள்ளன.
அர்ஜென்டினாவை AI மாதிரிகள் (ChatGPT,laude, pilot.Meta AI) என்பன செம்பியனாக கணித்துள்ளன.

இரண்டாம் இடக்கணிப்பில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா தலா 3 வாக்குகளைப் பெற்றுள்ளன.

இங்கிலாந்து 2 வாக்குகளையும், ஸ்பெயின் 1 வாக்கையும் பெற்றுள்ளன.

ஸ்பெயின் அணியே மூன்றாமிடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் எள ஸ்பெயின் போட்டி நாளை அதிகாலை இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான போட்டி 15ஆம் திகதியன்று நடைபெறுகிறது.

இந்தத் தொடரின் மூன்றாமிடத்திற்கான போட்டி ஜூலை 18 அன்றும், இறுதிப் போட்டி ஜூலை 19 அன்றும் நடைபெறவுள்ளன.
·

Recommended For You

About the Author: admin