மெட்டா – AMD மெகா ஒப்பந்தம்: AI உலகில் ஒரு புதிய புரட்சி!

மெட்டா – AMD மெகா ஒப்பந்தம்: AI உலகில் ஒரு புதிய புரட்சி!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, சிப் தயாரிப்பு நிறுவனமான AMD உடன் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாண்ட ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

📋 அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் $100 பில்லியன் மதிப்பிலான AI சிப்களை மெட்டா நிறுவனம் AMD-யிடம் இருந்து கொள்முதல் செய்யவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 6 ஜிகாவாட் (6GW) அளவிலான AI கம்ப்யூட்டிங் திறனை மெட்டா உறுதி செய்துள்ளது. இது மில்லியன் கணக்கான வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்திற்கு இணையான ஆற்றல் கொண்ட உள்கட்டமைப்பாகும்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, AMD நிறுவனத்தின் சுமார் 10% பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பையும் (Warrants) மெட்டா பெற்றுள்ளது.

மெட்டாவின் தேவைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Instinct MI450 GPUs மற்றும் 6th Gen EPYC CPUs ஆகியவற்றை AMD வழங்கவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், தற்போது AI சிப் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் Nvidia நிறுவனத்திற்குப் போட்டியாக, ஒரு வலுவான மாற்று சக்தியாக AMD-யை இந்த ஒப்பந்தம் உயர்த்தியுள்ளது, தனது சொந்த AI மாடல்களை (Llama போன்றவை) வேகமாகவும் திறமையாகவும் இயக்க, மெட்டா தனது வன்பொருள் (Hardware) தேவைகளை இதன் மூலம் உறுதிப்படுத்துகிறது.

2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து இந்த புதிய சிப்களின் விநியோகம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin